×

தேனி மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்

தேனி, ஜூன் 2: தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வட்டாட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் சிலருக்கு பணிமாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பெரியகுளம் தாசில்தார் ஆண்டிபட்டி வட்டாட்சியராகவும், ஆண்டிபட்டி தாசில்தார் சுந்தர்லால் கம்பம் நிலவரித்திட்ட அலுவலராகவும், கம்பம் நிலவரித்திட்ட அலுவலராக இருந்த எம்.சுருளி பெரியகுளம் வட்டாட்சியராகவும், சின்னமனூர் நகர நிலவரித்திட்ட அலுவலராக உள்ள பி.முருகேசன் போடிநாயக்கனூர் சமூக பாதுகாப்பு திட்ட தனிவட்டாட்சியராகவும் மேலும், சின்னமனூர் நகர நிலவரித்திட்ட அலுவலர் பணியையும் கூடுதலாக பொறுப்பு வகிக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.

The post தேனி மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Theni district ,Theni ,District ,Collector ,Shajeevana ,Dinakaran ,
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்