ஆண்டிபட்டி, ஜூன் 2: தேனி அரசு தொழில் பயிற்சியில் கட்டிட பட வரைவாளர் பாடப்பிரிவில் மாணவர்கள் படித்து வருகின்றனர். அங்கு படிக்கும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வைகை அணையில் கட்டுமானம் குறித்த பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கப்பயிற்சி நடத்தப்பட்டது. 30க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வைகை அணையின் மதகுபகுதி, கசிவுநீர் சுரங்கம், அணையின் பிரதான பகுதி மற்றும் பிக்கப் அணை பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு அணையின் கட்டுமானம் மற்றும் தொழில்நுட்பம் குறித்தும் வைகை அணையின் நீர்பாசனம் குறித்தும் தேனி அரசு தொழிற்பயிற்சி பள்ளி முதல்வர் சேகரன், உதவி பயிற்சி அலுவலர் அனந்தகிருஷ்ணன், வைகை அணையின் உதவி செயற்பொறியாளர் முருகேசன் ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். அணையின் முக்கிய பகுதிகளுக்கு மாணவர்களை பொதுப்பணித்துறை பணியாளர் கணேசன் அழைத்து சென்று சுற்றிக் காட்டினார்.
The post அரசு ஐடிஐ மாணவர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.
