×

தமாகா நிர்வாகி இல்லத் திருமண விழா மணமக்களுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

 

திருப்புவனம், ஜூன் 2: திருப்புவனத்தில் நடந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தொண்டரணி தலைவர் அயோத்தியின் இல்ல திருமண விழாவில், ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி. இவரது மூத்த சகோதரர் திருப்புவனம்புதூர் முத்தழகு. சகோதரி திருமங்கலத்தை சேர்ந்த குயிலா. நேற்று திருப்புவனத்தில் முத்தழகு-கஸ்தூரி தம்பதியின் மகன் சின்னராஜாவுக்கும், திருமங்கலம் பிரபாகரன்-குயிலா தம்பதியின் மகள் விஜயசாந்திக்கும் திருமணம் நடந்தது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இத்திருமணத்தை திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார். மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி வரவேற்றார். முன்னாள் எம்.பி., உடையப்பன், தமாகா மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோரும் மணமக்களை வாழ்த்தி பேசினர். பேரூராட்சி கவுன்சிலர்கள் பாரத்ராஜா, வெங்கடேஸ்வரி, சூரசிங்காரம், வட்டார தலைவர்கள் மணி, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். லோகநாதன் நன்றி கூறினார்.

The post தமாகா நிர்வாகி இல்லத் திருமண விழா மணமக்களுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,Tamaka Executive ,House ,Tiruppuvanam ,Tamil State Congress Party ,Ayodhya ,Tamaka Executive House ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் தமிழக மக்களின் தண்ணீர்...