×

சிறுமிக்கு பாலியல் தொல்லை தாய்மாமன் போக்சோவில் கைது

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமனை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கொருக்குப்பேட்டை ஜீவா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி, வீட்டில் தனியாக இருந்தபோது, அவளது தாய்மாமன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியபோது, உறவினர்தானே என்று இதனை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் பாலியல் தொல்லையால் சிறுமிக்கு உடலில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக கொடுங்கையூரைச் சேர்ந்த சையத் அலி (35) என்ற தனியார் நிறுவன ஊழியரை நேற்று கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், வீட்டில் தனியாக இருந்தபோது சையது அலி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தில் சையத் அலியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை தாய்மாமன் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Bokso ,Thandaiyarpet ,Korukuppet ,Korukuppettah ,
× RELATED வாகன சோதனையின்போது உரிய ஆவணமில்லாத ரூ.15 லட்சம் பறிமுதல்