×

ஏரல்-முக்காணி மெயின்ரோட்டில் அம்மாள்தோப்பு பகுதி வேகத்தடையில் எச்சரிக்கைேகாடு இல்லாததால் விபத்து அபாயம்

ஏரல், ஜூன் 2: ஏரலில் இருந்து முக்காணி செல்லும் மெயின் ரோட்டில் அம்மாள்தோப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் எச்சரிக்கைகோடு வரைந்து விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரலில் இருந்து முக்காணி செல்லும் மெயின்ரோட்டில் அம்மாள்தோப்பு பகுதியில் பஸ் நிறுத்தம் அருகில் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இதனால் பள்ளி பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் அமைப்பதைவிட சற்று உயரமாக உள்ளது. மேலும் இதில் பூசப்பட்ட எச்சரிக்கைகோடு அழிந்ததால் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகின்றனர்.

இதேபோல் கடந்த 20 நாட்களுக்கு முன்பு முக்காணியில் டீக்கடை நடத்தி வந்த வேல்முருகன்(53) என்பவர் இவ்வழியாக அதிகாலையில் பைக்கில் வரும்போது இந்த வேகத்தடை இருப்பது தெரியாமல் கீழே விழுந்து தலையில் பலத்த அடிப்பட்டு இறந்துவிட்டார். இதேபோல் இந்த சாலையில் வருபவர்கள் பல பேர் கீழே விழுந்து படுகாயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இப்பகுதியில் விபத்து, உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்த்திட வேகத்தடையில் வெள்ளை பெயின்ட் அடித்தும், ஒளிரும் விளக்கும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து புதுமனை அம்மாள்தோப்பு நண்பர்கள் நற்பணி மன்ற தலைவர் ஜெயராஜ் கூறுகையில், ஏரல்- முக்காணி செல்லும் சாலையில் ஐந்து இடங்களுக்கு மேல் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் நலன் கருதி அனைத்து வேகத்தடைகளிலும் வெள்ளை பெயின்ட் அடித்தும், இரவில் ஒளிரும் விளக்கும் அமைத்திட வேண்டும் என கூறியுள்ளார்.

The post ஏரல்-முக்காணி மெயின்ரோட்டில் அம்மாள்தோப்பு பகுதி வேகத்தடையில் எச்சரிக்கைேகாடு இல்லாததால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Ammalthop ,Arel-Mukhani ,Eral ,Ammaltopu ,Mukhani ,Eral-Mukhani ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயிலில் புதுமண...