×

துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகனுக்கு 52.14% வாக்குகள்

அங்காரா: துருக்கி அதிபர் தேர்தல் மே மாதம் 14ம் தேதி நடைபெற்றது. இதில் யாருக்கும் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் கிடைக்கவில்லை. இதையடுத்து மே 28ம் தேதி இரண்டாம்முறையாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகன். 52.14 சதவீத வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட கெமால் கிலிக்டெரொலு 47.86 சதவீத வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து எர்டோகன் 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார். இந் வெற்றியை துருக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது.

The post துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகனுக்கு 52.14% வாக்குகள் appeared first on Dinakaran.

Tags : Erdogan ,Turkey ,election ,Ankara ,Dinakaran ,
× RELATED துருக்கியில் கேளிக்கை விடுதியில்...