×

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்: போலீசார் விசாரணை

திருவள்ளூர்: விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், பஞ்சந்திருத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி மாலா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள், தங்களது மூத்த மகன், முத்துக்குமாரன்(13) என்பவரை திருப்பாச்சூரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு, விட்டு இரண்டு குழந்தைகளுடன் சென்னை கொளத்தூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த, 27ம் தேதி, முத்துக்குமரன், தனது சித்தப்பாவின், ஸ்கூட்டியை யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு, தனது 12 வயது நண்பருடன் சென்றுள்ளார். அப்போது, திருப்பாச்சூர் அருகே திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திருத்தணி நோக்கிச் சென்ற, கார், ஸ்கூட்டி மீது மோதியது.

இதில் இருவருக்கும் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள், உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு, மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டனர். இதில், கடந்த 30ம் தேதி, முத்துக்குமரன் சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்து உடல் உறுப்புகளை தானம் செய்தனர். மேலும், சிறுவனின் தாயார் மாலா நேற்று திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Panchandruti village, Kanchipuram district.… ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...