×

கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பம்: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகள் மற்றும் இன்டஸ்டிரீஸ் 4.0 தரத்தில் துவங்கப்படும் 5 புதிய தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி காலத்தில் கட்டணமில்லா பயிற்சி, உதவி தொகை மாதந்தோறும் ₹750, பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள், காலணி ஆகியவை வழங்கப்படும். பயிற்சியின் போது Internship Training மற்றும் Inplant Training மூலம் தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்தவுடன் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி. விண்ணப்பிப்பதற்கான இணைய தள முகவரி www.skilltraining.tn.gov.in. விண்ணப்பிப்பதற்கான தேதி வருகிற 7ம் தேதி. 044-22501350 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

The post கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பம்: சென்னை கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Guindi Vocational Training Center ,Chennai ,Collector ,Amritajyoti ,Government of Guindy ,Vocational Training Centre ,Chennai District… ,Gindi Vocational Training Center ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு...