×

கீரப்பாக்கம் ஊராட்சியில் ராட்சத பாய்லர் வெடித்த விபத்து: மேலும் ஒருவர் பலி: 2 தொழிற்சாலை நிர்வாகிகள் கைது

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு, விநாயகபுரம் பகுதி மலையடிவாரத்தில் தனியார் சிமென்ட் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் 8 பாய்லர்களில் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் ஆபரேட்டர் யுவராஜ் (25) உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதில், உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒப்பந்த ஊழியர் மீராஜ் (28) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பாய்லர் வெடித்ததில் படுகாயம் அடைந்த ஆபரேட்டர் யுவராஜ்(23), உ.பியை சேர்ந்த மற்றொரு ஒப்பந்த ஊழியர் ஹெக்லக் (23) ஆகிய இருவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.ஹெக்லத் நேற்றுமுன்தினம் இரவு இறந்தார்.

இந்நிலையில், அந்த தனியார் தொழிற்சாலையின் மேலாளர் வண்டலூர் லாரா லேக் அவன்யூ பகுதியை சேர்ந்த நரேஷ் குமார் (50) மற்றும் அவருடன் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஊத்துக்கோட்டை தாளுக்கா, கன்னிகை பெரு கிராமம் மாரியம்மன் கோயிலை சேர்ந்த பிரவு (33) ஆகிய இருவரையும் காயர் போலீசார் கைது செய்து நேற்று மாலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில், பாய்லர் வெடித்ததில் படுகாயம் அடைந்த ஆபரேட்டர் யுவராஜ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஏற்கனவே உயிரிழந்த மீராஜ் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஹெக்லக் ஆகிய இருவரும் உத்திர பிரதேச மாநிலம் வாரணவாசி மாவட்டம் சவுபியூர் தாலுக்கா சந்திராவதி கிராமத்தை சேர்ந்தவர்கள்.

The post கீரப்பாக்கம் ஊராட்சியில் ராட்சத பாய்லர் வெடித்த விபத்து: மேலும் ஒருவர் பலி: 2 தொழிற்சாலை நிர்வாகிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Kooduvancheri ,4th Ward ,Vinayagapuram ,Vandalur ,2 Factory ,Dinakaran ,
× RELATED தென்சென்னை தொகுதியில் உள்ள பெண்களை...