×

தோட்டக்கலைத்துறை சார்பில் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி: நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது

சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் நாளை தொடங்கி, வரும் 5ம் தேதி வரை மலர் கண்காட்சி நடத்தப்படும், என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக தோட்டக்கலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. அதன்படி அவரது பிறந்தநாளை முன்னிட்டு தோட்டக் கலைத்துறை சார்பில் சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் ஜூன் 3ம் தேதி மலர் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

பெங்களூரு, உதகை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு ரூ.20 கட்டணமாகவும், பெரியவர்களுக்கு ரூ.50 நுழைவு கட்டணமாகவும் வசூலிக்கப்படும், கேமராவுக்கு ரூ.50, வீடியோ எடுக்க ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல், செம்மொழி பூங்காவில் கடந்த ஆண்டு, ஜூன் மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது.

இதற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, 2வது மலர் கண்காட்சி, நாளை முதல் 5ம் தேதி வரை நடக்கவுள்ளது. செம்மொழி பூங்காவில், அரியவகை மரங்கள் பராமரிக்கப்பட்டுகிறது. வெயிலின் கடுமையான தாக்கம் காரணமாக பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கோடை விடுமுறை மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவதால் பள்ளி மாணவ, மாணவிகள் கண்காட்சியை பார்வையிடலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தோட்டக்கலைத்துறை சார்பில் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி: நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Semen Park ,Horticulture Department ,Chennai ,Chennai Langui Park ,Sheepskin Park ,Dinakaran ,
× RELATED கர்நாடக பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் ஜெரோனியம் மலர்கள்