×

எல்ஐசி நிர்வாகம் தகவல் எல்.ஐ.சி.யின் மொத்த பிரீமிய வருமானம் ரூ.4.74 லட்சம் கோடி

சென்னை: எல்.ஐ.சி. மொத்த பிரீமிய வருமானமாக ரூ.4,74,005 கோடிகளை ஈட்டி 10.90% வளர்ச்சியை அடைந்துள்ளது என்று எல்ஐசி தெரிவித்துள்ளது. எல்ஐசி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

* 2022-23 – ல் எல்.ஐ.சி. மொத்த பிரீமிய வருமானமாக ரூ.4,74,005 கோடிகளை ஈட்டி 10.90% வளர்ச்சியை அடைந்துள்ளது

* முதல் வருட பிரீமிய அடிப்படையில் சந்தை பங்களிப்பாக 62.58% பெற்று தனது முதன்மை இடத்தை எல்ஐசி தக்க வைத்துக்கொண்டுள்ளது. மேலும் சென்ற வணிக ஆண்டு 2022-ல் பெற்ற முதல் வருட பிரீமியமான ரூ.1.98 லட்சம் கோடிகளை விட 16.67% அதிகமாக ரூ.2.32 லட்சம் கோடிகளை பெற்றுள்ளது.

* இரண்டு கோடியே நான்கு இலட்சம் பாலிசிகள் விற்பனை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

* புது வணிகத்தின் மொத்த மதிப்பு 16.46 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து உச்சத்தை தொட்டுள்ளது.

* வரிக்குப் பின் லாபம் ரூ.36,397 கோடிகள். இயக்குனர்கள் குழு, ஒரு எல்.ஐ.சி. பங்கிற்கு ரூ.3 ஈவுத்தொகையை அளிக்க பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் ரூ.1,897 கோடிகள் வழங்கப்படவுள்ளது.

* 31 மார்ச் 2023 வரை நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து மதிப்பு ரூ.43.97 லட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது. இது சென்ற வணிக ஆண்டில் ரூ.40.85 லட்சம் கோடிகளை விட 7.65% அதிகமாகும். 31 மார்ச் 2023 முடிவில் பிரீமியத்தின் அடிப்படையில் நிலைத்தன்மை விகிதம் 13 மற்றும் 61 – வது மாதங்களில் முறையே 77.09% மற்றும் 61.80% ஆகும். இதுவே 31 மார்ச் 2022 முடிவில் முறையே 75.59% மற்றும் 61% ஆகும். இந்திய உட்பொதிக்கப்பட்ட மதிப்பு சென்ற ஆண்டை விட 7.53% அதிகரித்துள்ளது.

The post எல்ஐசி நிர்வாகம் தகவல் எல்.ஐ.சி.யின் மொத்த பிரீமிய வருமானம் ரூ.4.74 லட்சம் கோடி appeared first on Dinakaran.

Tags : LIC Management Information LIC ,Chennai ,LIC ,LIC… ,Dinakaran ,
× RELATED சென்னையில் 18 மெட்ரோ ரயில்...