கொடைக்கானல்: ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். நடந்து முடிந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் பைன் மரக்காடு சுற்றுலா தலத்தில் இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தனர். பின்னர் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி மகிழ்ந்தனர். இதில் கொடைக்கானலை சேர்ந்த புகைப்பட கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
The post ஐபிஎல்லில் சிஎஸ்கே வெற்றி கொடைக்கானலில் கேக் வெட்டி சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.
