×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஜோகோவிச் 3வது சுற்றுக்கு தகுதி

பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் களிமண் தரையில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று போட்டியில், 3ம் நிலை வீரரான 36 வயது செர்பியாவின் ஜோகோவிச், ஹங்கேரி வீரர் மார்ட்டன் பியூசோவிக்சுடன் மோதினார். இதில் 7-6 , 6-0 6-3 என ஜோகோவிச் வென்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார். 7ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ், 6-4, 6-2, 3-6, 6-3 என பிரான்சின் கோரெண்டின் மௌடெட்டை வென்றார்.

இத்தாலியின் லோரென்சோ முசெட்டி,ஸ்பெயினின் அலெஜான்ட்ரோ டேவிடோவிச், இங்கிலாந்தின் கேமரூன் நோரி, நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் ஆகியோரும் 2வது சுற்றில் வென்று 3வது சுற்றுக்குள் நுழைந்தனர். மகளிர் ஒற்றையரில் இன்று அதிகாலை நடந்த 2வது சுற்று போட்டியில்20 வயதான ரஷ்யாவின் எலினா அவனேசியன், 6-0, 7-5 என்ற செட் கணக்கில், பிரான்சின் லியோலியா ஜின்ஜீனை வென்றார்.

ரஷ்யாவின் 21 வயது கமிலா ரக்கிமோவா, 6-3, 6-4 என போலந்தின் மாக்டலேனா ஃப்ரெச்சையும், டென்மார்க்கின் கிளாரா டாசன், 6-3, 5-7, 6-4 என கனடாவின் லெய்லா பெர்னாண்டசையும், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், 6-2, 6-1 என ரஷ்யாவின் வர்வரா கிராச்சேவாவையும், ருமேனியாவின் இரினா-கேமிலியா பேகு, இத்தாலியின் சாரா எர்ரானியையும் வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, 7-5.6-2 என சக நாட்டைச் சேர்ந்த இரினா ஷைமனோவிச் வீழ்த்தி 3வதுசுற்றுக்கு தகுதி பெற்றார்.ஆடவர் இரட்டையரில் இந்தியாவின், யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடி 6-3, 6-2 என பிரான்சின் என்ஸோ குவாக்காட், ஆர்தர் ரிண்டர்க்னெக் ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தது.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஜோகோவிச் 3வது சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : French Open Tennis ,Algaras ,Djokovich ,Paris ,Adeavar ,Algarus ,Dinakaran ,
× RELATED யுஎஸ் ஓபன் டென்னிஸ் பைனல்...