×

சீமான், மே 17 இயக்க நிர்வாகிகளின் டிவிட்டர் கணக்குகளை முடுக்குமாறு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை: சென்னை போலீஸ் விளக்கம்

சென்னை: சீமான், மே 17 இயக்க நிர்வாகிகளின் டிவிட்டர் கணக்குகளை முடுக்குமாறு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை சென்னை போலீஸ் தெரிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், மேடைகளில் உணர்வுப்பூர்வமாகவும் ஆவேசமாகவும் பேசும் காணொலிகளைப் பகிர்வது வழக்கம். மேலும், அரசுக்கு எதிரான கருத்துகளையும் டிவிட்டரில் பதிவிடுவார். தற்போது, சீமானின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

அவரின் டிவிட்டர் பக்கத்திற்குச் சென்றால், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், சீமானின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதில், நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடக தளங்களை முடக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தப்படுகிறது. எனவே இவ்விவகாரத்தில் சென்னை பெருநகர காவல்துறையை தொடர்புபடுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தவறான தகவல் பரப்புகள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சீமான், மே 17 இயக்க நிர்வாகிகளின் டிவிட்டர் கணக்குகளை முடுக்குமாறு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை: சென்னை போலீஸ் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Seeman ,Twitter ,Chennai police ,Chennai ,Dinakaran ,
× RELATED சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை...