×

உடுமலை அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

உடுமலை: உடுமலை அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உடுமலை அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்ணங்களில் சுமார் 54 ஆயிரத்து 537 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில், உடுமலை, கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய எட்டு ராஜவாய்க் கால்களுக்குட்பட்ட, 7ஆயிரத்து 520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நடப்பு ஆண்டில், பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு குறுவை நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, இன்று ( ஜூன்1 ) முதல் 135 நாட்களில் குறிப்பட்ட இடைவெளியில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து, இன்று முதல் வரும்அக் 13., வரை 135 நாட்களில் குறிப்பிட்ட இடைவெளியில் 80 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு, 55 நாட்களுக்கு அடைப்பு என்ற முறையில், 2074 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில், அமராவதி வடிநில கண்காணிப்பு பொறியாளர் பாண்டி (பழநி), செயற் பொறியாளர் கோபி (தாராபுரம்), உதவி செயற் பொறியாளர் பாலசுப்பிரமணி ( அமராவதி), உதவிப் பொறியாளர்கள் அரவிந்த், ராமசந்திரன், அலுவலர் பாபு, ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்று அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டனர்.

The post உடுமலை அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Udumalai Amravati Dam ,Old Ayakadi ,Udumalai ,Ayakkar ,Tiruppur ,Karur ,Dinakaran ,
× RELATED வண்ண ஓவியங்களால் ஜொலிக்கும் உடுமலை மத்திய பேருந்து நிலையம்