×

சங்கராபுரம் அருகே சோகம் மின்சாரம் தாக்கி முன்னாள் கவுன்சிலர் பரிதாப பலி

சங்கராபுரம், ஜூன் 1: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி மகன் அய்யன்துரை(55), முன்னாள் கவுன்சிலர். இவர் அதே கிராமத்தில் செங்கல் சூளைகளுக்கு மரம் வெட்டி அதனை ஏற்றி செல்லும் வேளையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இளையங்கன்னி கிராமத்திலிருந்து மணலூர் கிராமத்தில் உள்ள பாரதி என்பவரின் செங்கல் சூளைக்கு மரங்களை ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது மணலூர் அய்யனார் குளம் என்ற இடத்தின் அருகே டிராக்டர் வந்தபோது டிராக்டரின் மேலிருந்த மரமானது மேலே சென்று கொண்டிருந்த மின் கம்பியின் மீது உரசி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அங்குள்ள இரண்டு ட்ரான்ஸ்பார்மர்களில் மரத்தில் மீது மோதிய மின்கம்பி செல்லும் டிரான்ஸ்பார்மராக நினைத்து வேறு ஒரு டிரான்ஸ்பார்மரை அணைத்துவிட்டு தவறுதலாக மின்கம்பியின் மீது அய்யன்துரை கை வைத்து உள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அய்யன்துரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post சங்கராபுரம் அருகே சோகம் மின்சாரம் தாக்கி முன்னாள் கவுன்சிலர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Shankarapuram ,Ganapathi ,Ayyanthurai ,Manalur village ,Sankarapuram, Kallakurichi district.… ,Sankarapuram ,Dinakaran ,
× RELATED சங்கராபுரம் ஊராட்சியில் அரசுப் பள்ளியில் ஆண்டு விழா