×

முதன் முதலாக தொழிலுக்கு வந்தார் 56 கிலோ போதை பொருட்கள் காரில் கடத்தியவர் அதிரடி கைது

தியாகதுருகம், ஜூன் 1: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சித்தலூர் சமத்துவபுரம் அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது சந்தேகம் படும்படியாக சாலையின் ஓரமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. காரை சோதனை செய்த பொழுது அதில் புகையிலை பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் கணேசன்(43), என்பவர் பெங்களூர் பகுதியில் இருந்து இந்த புகையிலை பொருட்களை இறக்குமதி செய்து சிறு கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும், இவர் முதன்முதலாக இந்த தொழிலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கணேசனை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 56 கிலோ குட்கா மற்றும் கடத்தலில் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post முதன் முதலாக தொழிலுக்கு வந்தார் 56 கிலோ போதை பொருட்கள் காரில் கடத்தியவர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tamil Nadu government ,Sitalur Samathapuram ,Kallakkirichi district ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...