×

தாய்லாந்து ஓபன் பேட்மின்டன்; சாய்னா, லக்‌ஷயா முதல் சுற்றில் வெற்றி

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டியில் நேற்று முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால், கனடா வீராங்கனை வென் யூ சாங் உடன் மோதினார். காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த சாய்னா மீண்டும் களத்துக்கு வந்துள்ளார். வழக்கமான வேகத்துடன் விளையாடிய சாய்னா, 26நிமிடங்களிலேயே 21-13, 21-7 என நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அஷ்மிதா சாலிஹா, மாளவிகா பன்சூட் ஆகியோர் மோதினர். அதில் அஷ்மிதா 32 நிமிடங்களில் 21-17, 21-14 என நேர் செட்களில் வெற்றிப் பெற்று 2வது சுற்றுக்கு தகுதிப் பெற்றார். அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 1மணி 10 நிமிடங்கள் போராடி 21-23, 21-15, 21-15 என்ற செட்களில் தைவானின் சூ வேய் வாங்கை வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். தகுதிச் சுற்றின் மூலம் முதன்மை சுற்றில் விளையாட தகுதிப் பெற்ற கிரண் ஜார்ஜ் 47 நிமிடங்களில் 21-18, 22-20 என நேர் செட்களில் சீனாவின் யூ கி ஷியை வீழ்த்தி 2வது சுற்றில் விளையாட உள்ளார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய இணை சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஆகியோர் 2வது சுற்றில் தகுதிப் பெற்றுள்ளனர். மலேசியா மாஸ்டர்ஸ் ஓபனில் காலிறுதி வரை முன்னேறிய கிடாம்பி காந்த், அரையிறுதி வரை முன்னேறிய பி.வி.சிந்து ஆகியோர் நேற்று முதல் சுற்றுடன் வெளியேறினர். கூடவே ஆடவர் பிரிவில் சமீர் வர்மா, சாய் பிரினீத், பிரியன்சு ராஜ்வத், ஆகியோரும் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.

The post தாய்லாந்து ஓபன் பேட்மின்டன்; சாய்னா, லக்‌ஷயா முதல் சுற்றில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Thailand Open Badminton ,Saina ,Lakshya ,Bangkok ,Lakshaya ,Dinakaran ,
× RELATED ஒலிம்பிக் திருவிழா பாரிஸ் – 2024:...