×

நேபாள பிரதமர் இந்தியா வருகை

புதுடெல்லி: நேபாள பிரதமர் பிரசண்டா 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். நேபாள பிரதமராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா 3வது முறையாக பொறுப்பேற்றார். அதன் பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நேற்று டெல்லி வந்தார். விமான நிலையம் வந்த அவருக்கு ஒன்றிய இணையமைச்சர் மீனாட்சி லெகி வரவேற்பு அளித்தார். இன்று டெல்லியில் பிரதமர் மோடியும், பிரசண்டாவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
அப்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு,  துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரையும் பிரசண்டா சத்திக்க உள்ளார்.இதுகுறித்து வௌியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனதுடிவிட்டர் பதிவில் “பிரசண்டாவின் இந்திய வருகை இந்தியா-நேபாளம் இடையேயான  உறவுக்கு புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்தை அளிக்கும்” என்று  குறிப்பிட்டுள்ளார்.

The post நேபாள பிரதமர் இந்தியா வருகை appeared first on Dinakaran.

Tags : Prime Minister of ,Nepal ,India ,New Delhi ,Prasanda ,Dinakaran ,
× RELATED மீண்டும் சர்ச்சை கிளப்பும் நேபாளம்;...