×

ஓடிடி தளத்தில் புகையிலை எதிர்ப்பு வாசகம்: ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ஓடிடி தளங்களில் புகையிலைக்கு எதிரான வாசகங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஓடிடி தளத்தில் இனி வெளியாகும் படங்களில் புகைப்பிடித்தல், புகையிலை பொருள்கள் வரும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பை மீறும் படக்குழு மீது சுகாதாரம் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், தொடக்கத்திலும் நடுவிலும் குறைந்தபட்சம் 30 வினாடிகள் நீடிக்கும், புகையிலை எதிர்ப்பு சுகாதார விளம்பரத்தைக் காண்பிக்க வேண்டும். திரையின் அடிப்பகுதியில் ஒரு முக்கிய நிலையான செய்தியாக புகையிலை எதிர்ப்பு சுகாதார எச்சரிக்கையை அவர்கள் காண்பிக்க வேண்டும். தியேட்டர் பின்பற்றும் விதிகள் ஓடிடி இயங்குதளங்களுக்கும், வரைவு அறிவிப்பின் படியும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஓடிடி தளத்தில் புகையிலை எதிர்ப்பு வாசகம்: ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் பயன்படுத்தப்படும்...