×

தகாத உறவு ஆசிட் வீசி கணவனை கொன்ற மனைவி

ஈரோடு: ஈரோடு கனி ராவுத்தர் குளம் ஜாமியா மஸ்ஜித் பின்புற வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (52). தறிப்பட்டறைத் தொழிலாளி. இவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை அறிந்த மனைவி பத்மா (52) கண்டித்துள்ளார். ஆனால் அதை அவர் அலட்சியப்படுத்தவே கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பத்மா கணவரின் முகத்தில் பாத்ரூமுக்கு உபயோகப்படுத்தும் ஆசிட்டை ஊற்றினார். வலி தாங்க முடியாமல் அவர் அலறவே கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு, வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

The post தகாத உறவு ஆசிட் வீசி கணவனை கொன்ற மனைவி appeared first on Dinakaran.

Tags : Erode Gani Ravuttar ,Pond Jamia Masjid ,Subramani ,Dinakaran ,
× RELATED டூவீலர், வைக்கோல் போருக்கு தீ வைத்த விவசாயி கைது