×

சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜூன் 9ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை..!!

சென்னை: சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜூன் 9ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தையில் சிஐடியூ, அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜூன் 9ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை..!! appeared first on Dinakaran.

Tags : Transport Union ,Chennai ,Transport Corporation ,Transport Union Representatives ,Dinakaran ,
× RELATED மாநகர போக்குவரத்து கழகத்தின் புதிய...