×

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு சேர கால அவகாசம் நீட்டிப்பு.!

சென்னை: டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ் இயங்கும் சட்டக்கல்லூரிகளில் சேருவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப் படிப்பானது ஐந்து ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு என இரு நிலைகளில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பு முடித்தவர்கள் ஐந்து ஆண்டு சட்டப் படிப்பையும், பட்டப்படிப்பை முடித்தவர்கள் மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்பையும் படிக்க முடியும் . மூன்று ஆண்டு படிப்புக்கு எல்எல்பி , எல்எல்பி ஹானர்ஸ் என்னும் பெயரிலும், ஐந்தாண்டு படிப்புக்கு பிஏ எல்எல்பி மற்றும் பிஏ எல்எல்பி ஹானர்ஸ் இன்னும் இருநிலைகளிலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஐந்தாண்டு சட்டப்படிப்பு படிக்க வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் கீழுள்ள கல்லூரிகளில் சட்டப்படிப்பு படிப்பதற்கு மே 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை.யின் கீழ் இயங்கும் சட்டக்கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு சேர விண்ணப்பிக்க தேதி வரும் ஜூன் 10 வரை நீட்டிகப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் பயிற்றுவிக்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tndalu.ac.in வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.06.2023 மாலை 05.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

The post அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு சேர கால அவகாசம் நீட்டிப்பு.! appeared first on Dinakaran.

Tags : Ambedkar Law University ,CHENNAI ,Dr. ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மக்கள் சிந்திக்க கூடாது என்பதற்காகவே...