×

4வது முறையாக எம்பாப்பேக்கு சிறந்த கால்பந்து வீரர் விருது

பாரீஸ்: 31வது யூஎன்எபி கால்பந்து தொடருக்கான இறுதி ஆட்டம் கடந்த 28ம் தேதி நடந்தது. இதில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மன் அணி 11வது முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே பெரிதும் உதவினார். மொத்தம் அவர் 28 கோல்கள், இந்த தொடரில் அடித்திருக்கிறார். அவரே இந்த தொடருக்கான சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருதை தொடர்ந்து 4வது முறையாக பெறுகிறார். 1994ல் இருந்து வழங்கப்பட்டு வரும் இவ்விருதை 4 முறை வென்றவர் இவரே. இதற்கு முன்பு 3 முறை சிறந்த வீரர் விருது பெற்ற ஸ்லாடன் இப்ராஹிமோவிக்கை மிஞ்சியுள்ளார்.

விருது பெற்ற பிறகு 24 வயதான எம்பாப்பே கூறுகையில், ‘வீரர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நான் எப்போதும் வெற்றி பெறவே விரும்புகிறேன். லீக் வரலாற்றில் என் பெயரை எழுத விரும்புகிறேன். ஆனால் நான் கொண்டிருக்கும் அனைத்து லட்சியங்களுடனும் இவ்வளவு விரைவாக வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை’ என்றார். எம்பாப்பே, பிஎஸ்ஜி அணியுடன் 2024 வரை ஒப்பந்தம் செய்துள்ளார். அதை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க விருப்பம் உள்ளது என கூறியுள்ளார்.

The post 4வது முறையாக எம்பாப்பேக்கு சிறந்த கால்பந்து வீரர் விருது appeared first on Dinakaran.

Tags : Mbappe ,Paris ,31st ,UNAP football series ,Paris Saint-Germain ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஸ்குவாஷ் வேலவன் சாம்பியன்