×

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கியர் மீட்பு

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு பயணித்தவர் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கினார். சுமார் 9 மணி நேரம் உயிருக்கு போராடியவரை 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சேலம் செல்லக்கூடிய மலைப்பாதை அடிவாரத்தில் இருக்கும் மக்கள் காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதே போன்று இன்று காலை நடைப்பயிற்சி சென்றவர்கள் 60 அடி பாலம் அருகே ஒருவர் சத்தமிட்டிருந்ததை கண்டு உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையறிந்து உடனடியாக வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆகியோர் பள்ளத்தில் உயிருக்கு போராடியவரை சுமார் 9 மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர். மீட்கப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தார் என்பது தெரிய வந்தது. மேலும் விபத்து குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கியர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Yercaud hill ,Salem district ,Salem ,Yercaud ,Dinakaran ,
× RELATED மாணவிகளை கிண்டல் செய்ததால் பள்ளி...