×

இருவிரல் பரிசோதனை குறித்து தவறான தகவல் அளித்த குழந்தைகள் நல ஆணைய உறுப்பினருக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் கண்டனம்..!!

சென்னை: இரு விரல் பரிசோதனை தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் தவறான தகவல் அளித்துள்ளார் என அமைச்சர் மா.சுப்ரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மருத்துவரிடம் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் என்ன பேசினார் என்ற ஆடியோ ஆதாரம் உள்ளது. இரு விரல் பரிசோதனை நடக்கவில்லை எனக் கூறிவிட்டு ஆளுநரை சந்தித்தபின் பரிசோதனை நடந்ததாக கூறினார். சுகாதாரத்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிகார போதையில் கூறியுள்ளார். குழந்தைகளின் நலன் கருதி ஆடியோ ஆதாரத்தை வெளியிடவில்லை என அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post இருவிரல் பரிசோதனை குறித்து தவறான தகவல் அளித்த குழந்தைகள் நல ஆணைய உறுப்பினருக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,child welfare commission ,Chennai ,National Child Welfare Commission ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் நடப்பாண்டு இதுவரை 11,538...