×

நாடு முழுவதும் மேலும் 150 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் திட்டம்!!

டெல்லி : நாடு முழுவதும் மேலும் 150 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி செயல்படாததால் நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களில் 40 மருத்துவக் கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தை இழந்துள்ளன. போதிய பேராசிரியர்கள் வருகை இல்லாதது, ஆதாருடன் இணைந்து பயோ மெட்ரிக் வருகை பதிவு இல்லாதது, சிசிடிவி கேமரா இல்லாதது என பல்வேறு குற்றச் சாட்டுகளை முன்வைத்து தமிழ்நாட்டில் 3 மருத்துவ கல்லூரிகள் உட்பட 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மேலும் 150 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ரத்து செய்யப்படும் மருத்துவக் கல்லூரிகள் 30 நாட்களுக்குள் தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அதுவும் நிராகரிக்கப்பட்டால் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் முறையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடு முழுவதும் மேலும் 150 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் திட்டம்!! appeared first on Dinakaran.

Tags : National Medical Commission ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை...