×

கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கோடை மழை ெதாடர்வதால் கண்காணிப்பு அவசியம்

நெல்லை, மே 31: கோடை கால இடி, மின்னல் மழை தொடர்வதால் மின் அலுவலர்கள் தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம் என கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்றுப் பேசிய நெல்லை, தென்காசி வட்ட மேற்பார்வை மின் பொறியாளர், மின் அலுவலர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் செயற்பொறியாளர் அலுவலகம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி, பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க, செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதில் கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் முகாமை ெதாடர்ந்து பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் பேசுகையில் ‘‘கோடைகாலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளால் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடும் இடி மின்னல் மழை பொழிவு சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது. இவ்வாறு கோடை கால இடி, மின்னல் மழை தொடர்வதால் மின் அலுவலர்கள் தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். குறிப்பாக அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணிபுரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் விநியோகம் வழங்குவதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்க வேண்டும். மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்பதை நுகர்வோரிடம் தெரிவிக்கவேண்டும்’’ என்றார்.

The post கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கோடை மழை ெதாடர்வதால் கண்காணிப்பு அவசியம் appeared first on Dinakaran.

Tags : People's Grievance Redressal Camp ,Kallitai Kurichi Kotam ,Nellai ,
× RELATED மண்டபம் ரயில், பஸ் நிலையங்களில்...