×

அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பயிற்சி பட்டறையை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார். குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுதலில் தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவோர் மீது சட்ட, அமலாக்கம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 1.4.2022 முதல் 30.4.2023 வரை 321 குழந்தைகள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட காலத்தில் 224 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு, ரூ.48,28,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதலில், பல்வேறு துறைகளின் பங்களிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டே தமிழ்நாடு அரசு, குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதலில் பல்வேறு துறைகளுக்கும் பயனளிக்க கூடிய வகையில் மாநில அளவிலான பயிற்சி பட்டறையை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில், நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பல்வேறு துறைகளுடன் மாநில அளவிலான பயிற்சி பட்டறையை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் துவக்கி வைத்தார்.

The post அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Minister C. CV Ganesan ,Chennai, ,PTI ,Minister ,Labour Welfare ,Tamil Nadu ,
× RELATED சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு;...