×

கட்சி மேலிட சந்திப்பை தொடர்ந்து ராஜஸ்தான் காங்கிரசில் கெலாட் – சச்சின் சமரசம்: தேர்தலில் இணைந்து உழைப்பதாக உறுதி

புதுடெல்லி:கார்கே, ராகுல் உடனான சந்திப்பை தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. ஜஸ்தானில் கடந்த 2018ல் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் கெலாட், சச்சினை டெல்லிக்கு அழைத்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கெலாட், சச்சின் இருவரிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் தேர்தலில் இணைந்து செயல்படவும், பா.ஜவுக்கு எதிராக ஒற்றுமையாக போராட ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களிடையே உள்ள அனைத்து பிரச்னையும் கட்சி மேலிடத்தால் தீர்க்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post கட்சி மேலிட சந்திப்பை தொடர்ந்து ராஜஸ்தான் காங்கிரசில் கெலாட் – சச்சின் சமரசம்: தேர்தலில் இணைந்து உழைப்பதாக உறுதி appeared first on Dinakaran.

Tags : Khelat-Sachin ,Rajasthan Congress ,New Delhi ,Rajasthan ,Chief Minister ,Ashok Khelat ,Sachin Pilot ,Kharke ,Rahul ,Jastan ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...