×

இங்கிலாந்தில் சிறுவர்களுக்கு இலவச இ-சிகரெட் வழங்க தடை: பிரதமர் ரிஷி சுனக் நடவடிக்கை

லண்டன்: பள்ளி மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட்டுகள் வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இ-சிகரெட் விற்பனை செய்வது சட்டவிரோத செயலாகும்.ஆனால் வணிகத்துக்காக குழந்தைகள் குறிவைக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மாதிரி என்ற பெயரில் காரீயம் கலந்த இ-சிகரெட்டுகள் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட் கிடைக்கும் வகையில் இயங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 18வயதுக்குட்பட்டவர்களுக்கு நிகோடின் இல்லாத புகையிலைகளை விற்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கு தடை விதிப்பது குறித்தும் அரசு மறுஆய்வு செய்யும் என்று அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், ‘குழந்தைகள் இ-சிகரெட் புகைப்பது குறித்து மிகுந்த கவலையடைகிறேன். பள்ளி குழந்தைகளின் கையில் சட்டவிரோத இ-சிகரெட் கிடைப்பது குறித்த அறிக்கையால் அதிர்ச்சி அடைந்தேன். இந்த தயாரிப்புக்களால் குழந்தைகளை சட்டவிரோதமாக குறிவைக்கும் மோசமான நிறுவனங்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

The post இங்கிலாந்தில் சிறுவர்களுக்கு இலவச இ-சிகரெட் வழங்க தடை: பிரதமர் ரிஷி சுனக் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Rishi Chung ,London ,Rishi Sunak ,England ,Dinakaran ,
× RELATED லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படித்த...