×

கண்டமனூர் அருகே நடுநிலைப் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை

வருசநாடு, மே 31: கண்டமனூர் அருகே கணேசபுரம் கிராமத்தில் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்டமனூர் அருகே கணேசபுரம் கிராமத்தில் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 120க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் சில இடங்களில் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக மேற்கூரை சேதமடைந்து நிலையில் உள்ளது. மேலும் சுற்றுச்சூழல் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இதனால் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். மேலும், மழை பெய்யும் நேரங்களில் வகுப்பறை கட்டிடங்களுக்குள் நீர்க்கசிவு ஏற்படுவதால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே சீரமைப்பு பணிகள் செய்திட வேண்டி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை முன் வைத்துள்ளனர். இது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கூறுகையில், ‘‘அரசு பள்ளி கட்டிடம் கட்டப்பட்ட பின்பு அதில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே தேனி மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கணேசபுரம் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.

The post கண்டமனூர் அருகே நடுநிலைப் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kandamanur ,Varusanadu ,Ganesapuram ,Dinakaran ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்