×

மயிலாடும்பாறை அருகே தோட்டத்தில் சாராய ஊறல் பதுக்கிய விவசாயி கைது

வருசநாடு, மே 31: மயிலாடும்பாறை போலீசார் நேற்று முன்தினம் இரவு பொன்னன்படுகை பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்டாரவூத்து செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள பொன்னன்படுகை கிராமத்தை சேர்ந்த சின்னன் (57) என்பவரின் தோட்ட பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் தோட்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த வீட்டிற்குள் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டிற்குள் இருந்த அலுமினிய பாத்திரத்தில் சுமார் 20 லிட்டர் சாராயம் ஊழல் போடப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அப்போது அங்கு வந்த சின்னன் போலீசாரை தோட்டத்தை விட்டு வெளியேறுமாறு கூறினார். மேலும் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதைடுத்து பாத்திரத்தில் ஊறல் போடப்பட்டிருந்த சாராயத்தை கீழே கொட்டி அழித்த போலீசார் சின்னனை கைது செய்தனர். அதன் பின்பு சாராய ஊறல் பதுக்கி வைத்தது, போலீஸ் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சின்னன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேக்கம்பட்டி கிளை சிறையிலடைத்தனர்.

The post மயிலாடும்பாறை அருகே தோட்டத்தில் சாராய ஊறல் பதுக்கிய விவசாயி கைது appeared first on Dinakaran.

Tags : Mailadumparai ,Varusanadu ,Mayiladumpara ,Ponnanpadukai ,
× RELATED கடமலைக்குண்டுவில் ஆக்கிரமிப்புகளால்...