×

கேரள முதியவர் மாயம்: போலீஸ் விசாரணை

 

ராமநாதபுரம், மே 31: கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்தவர் முரளீதரன் பிள்ளை (55). கடந்த மார்ச் 30ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் பின்னர் திரும்பவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் திருவல்லா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் முரளீதரன் பிள்ளையின் செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் அவர் ராமேஸ்வரத்தில் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கேரள போலீசார் ராமேஸ்வரத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேரள முதியவர் மாயம்: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Ramanathapuram ,Muralitharan Pillai ,Tiruvalla, Pathanamthitta District, Kerala State ,
× RELATED கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்...