×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் ரைபாகினா

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா தகுதி பெற்றார். தல் சுற்றில் செக் குடியரசின் பிரெண்டா பிருஹ்விர்தோவாவுடன் நேற்று மோதிய ரைபாகினா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 21 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீராங்கனைகள் கோகோ காஃப் (அமெரிக்கா), ஆன்ஸ் ஜெபர் (துனிசியா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய ஜெர்மனி நட்சத்திரம் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 7-6 (8-6), 7-6 (7-0), 6-1 என்ற நேர் செட்களில் 2 மணி, 43 நிமிடம் போராடி தென் ஆப்ரிக்காவின் லாயிட் ஹாரிசை வீழ்த்தினார்.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் ரைபாகினா appeared first on Dinakaran.

Tags : Raibagina ,French Open ,Paris ,French Open Grand Slam ,Kazakhstan ,French Open Tennis ,Dinakaran ,
× RELATED பார்போரா ஜாஸ்மின் பலப்பரீட்சை