×

அன்னூர் பகுதியில் காற்றுடன் கனமழை புளியமரம் சாய்ந்து விழுந்தது

 

அன்னூர், மே 31: அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக இருசக்கர வாகனத்தில் சாலையில் பயணிப்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். கன மழை காரணமாக, அன்னூர் எல்லப்பாளையம் பிரிவு பகுதியில் கோவை- சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருந்த நூறாண்டுகள் பழமையான ராட்சத புளிய மரம் முறிந்து சாலையில் விழுந்தது.

இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் சாய்ந்தது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சாலையில் கிடந்த மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். மழை காரணமாக அன்னூர் பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.

The post அன்னூர் பகுதியில் காற்றுடன் கனமழை புளியமரம் சாய்ந்து விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Annur ,Annoor ,Dinakaran ,
× RELATED மருந்து கடை உரிமையாளரிடம் ஆன்லைனில் மோசடி