×

அட்டப்பாடி வனத்தில் பயிரிட்ட கஞ்சா செடிகள் அழிப்பு

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப்பகுதிகளில் பயிரிடப்பட்ட  கஞ்சா செடிகளை புதூர் ரேஞ்ச் வன காவலர்கள் கண்டறிந்து அழித்தனர். அட்டப்பாடி புதூர் ரேஞ்சு வனத்தறை அதிகாரி மனோஜ், செக்‌ஷன் அதிகாரி  உன்னிகிருஷ்ணன், பீட் அதிகாரி ஜினு, வாட்ச்சர்கள் மல்லீஸ்வரன், சதீஷ்,  ரங்கன், முருகன், காளிமுத்து, கிருஷ்ணதாஸ் ஆகியோர் தலைமையில் புதூர்  வனத்துறை ஸ்டேஷனுக்கு உட்பட்ட இடவாணி ஊரிலிருந்து 3 கிலோ மீட்டர்  தூரத்திலுள்ள காட்டிற்குள் கஞ்சா வேட்டையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். காட்டிற்குள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிலர், கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளதை கண்டுபிடித்து அழித்தனர். மேலும்,  சுற்றுவட்டாரத்தில் கஞ்சா நாற்றுகள் நடவு செய்ய தயார் படுத்தி வைத்ததையும் அழித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து கஞ்சா செடிகளை பயிரிட்ட கும்பலை வனத்துறையினர் தேடி வருகின்றனர்….

The post அட்டப்பாடி வனத்தில் பயிரிட்ட கஞ்சா செடிகள் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Attappadi forest ,Palakkad ,Budur ,Palakkad district ,
× RELATED தனியாக பயணம் செய்கின்ற பெண்களின்...