×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல். தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலம் மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஆரம்பிக்கும். அதனைத்தொடர்ந்து ஏப்ரல் மாதத் தில் கணிசமான வெயில் பதிவானது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் உச்சகட்ட வெப்பம் பதிவானது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் மே 04 ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு மே 4-ம் தேதி துவங்கி, மே 29 ம் தேதி வரை, அதாவது சித்திரை 21 துவங்கி வைகாசி 15 வரை அக்னி நட்சத்திரம் உள்ளது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தினம் தினம் மழை பெய்து வந்தது. அதே போல பல மாவட்டங்களில் கத்தரி வெயில் மக்களை வாடி வதைத்தது. சென்னை புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் காணப்படுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் இருள் மேகம் சூழ்ந்து உள்ளது. இதனால் சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதியான ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Research Centre ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று...