×

திருவிக நகர் மண்டலத்தில் நாளை மக்களை தேடி மேயர் முகாம்: மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை: திருவிக நகர் மண்டலத்தில் நாளை மக்களை தேடி மேயர் முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி மேயரின் 2023-24ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், மக்களைத் தேடி மேயர் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்.

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை களையும் பொருட்டு, மக்களைத் தேடி மேயர் திட்டம் கடந்த 3ம் தேதி வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த முகாமில் மண்டலம் 5க்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மேயர் பிரியா பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

இதனைத் தொடர்ந்து, மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ், திருவிக நகர் மண்டல அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் பிரியா மண்டலம் 6க்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 6க்குட்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்துவரி மற்றும் தொழில்வரி, குப்பைகள் அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயர் அவர்களிடம் நேரடியாக வழங்கி பயனடைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post திருவிக நகர் மண்டலத்தில் நாளை மக்களை தேடி மேயர் முகாம்: மாநகராட்சி அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Thiruvika Nagar Zone ,Chennai ,Chennai Corporation ,Mayor ,Thiruvika Nagar ,Camp ,Thrivikam Nagar Zone ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கான நடமாடும் ஒப்பனை அறை அறிமுகம்..!!