×

வாழப்பாடி அருகே லாரி மீது சென்னை பஸ் மோதி: 17 பயணிகள் படுகாயம்

வாழப்பாடி: வாழப்பாடி அருகே இன்று அதிகாலை லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ் நேற்றிரவு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சை நெப்போலியன் ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் 27 பயணிகள் இருந்தனர். இதேபோல் அரியலூரில் இருந்து தர்மபுரிக்கு சிமென்ட் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை சின்னசாமி என்பவர் ஓட்டிச்சென்றார்.சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி கிழக்குக்காடு பகுதியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது சென்னை ஆம்னி பஸ் மோதியது.

இதில் ஆம்னி பஸ்சின் முன்பக்கம் நொறுங்கியது. அதிகாலை நேரத்தில் பஸ்சில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த திருப்பூர் ரித்திக், கோவையைச் ரவிச்சந்திரன் (63), பார்வதி (51), பிரபு (38) உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர். இவ்விபத்து பற்றி தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த 4 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாழப்பாடி அருகே லாரி மீது சென்னை பஸ் மோதி: 17 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vazhapadi ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...