×

டோனிக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறேன்: ஜடேஜா பேட்டி

போட்டி முடிந்து ஜடேஜா, பேசுகையில் கூறியதாவது: “எனது சொந்த ஊர் மக்கள் முன்பு விளையாடி 5வது கோப்பையை வெல்வது மிகச் சிறந்த உணர்வை கொடுக்கிறது. அதீத மக்கள் சிஎஸ்கே அணியை சப்போர்ட் செய்ய வந்திருந்தார்கள். நள்ளிரவு வரை மழை எப்போது நிற்கும், எப்போது விளையாட்டை பார்க்கலாம் என்று காத்திருந்தார்கள். கடைசி வரை இருந்து சிஎஸ்கே அணியை சப்போர்ட் செய்தார்கள். அவர்களுக்கு இந்த தருணத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். சிஎஸ்கே அணியில் இருக்கும் ஸ்பெஷல் மெம்பருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். அது மகேந்திர சிங் டோனி தான். மீண்டும் ஒருமுறை சிஎஸ்கே ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வளவு நேரம் என்று தொடர்ந்து எங்களுக்காக கத்தி கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தியதற்காக இந்த நன்றி. கடைசி ஓவரில் சற்று அழுத்தமாக இருந்தாலும் மோகித் சர்மா எப்படி பந்துவீசுவார் என்பதை கணித்திருந்தேன். பந்தில் வேகம் இருக்காது ஆகையால் பேட்டை சுழற்ற வேண்டும். எப்படிப் பந்தாக இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணினேன். அதற்கேற்றவாறு முதல் பந்து சிக்சர் போனதும் நம்பிக்கை கிடைத்தது. அடுத்ததாக அழுத்தம் இன்றி அடிக்க முடியும் என்று நம்பினேன். நடந்துவிட்டது. மிகச் சிறந்த தருணம் இது.” என்றார்.

The post டோனிக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறேன்: ஜடேஜா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Jadeja ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் வீரர் ஜடேஜா பா.ஜவில் இணைந்தார்