×

நெல்லையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை, மே 30: விழுப்புரம் சம்பவத்தை கண்டித்து நெல்லையில் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.
விழுப்புரத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்பேரில் நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் வண்ணார் பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவம், ஏ.கே.சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் பெரியபெருமாள், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினர். முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை வரவேற்றார்.

இதில் அம்பை தொகுதி எம்எல்ஏ இசக்கிசுப்பையா, மாவட்ட பொருளாளர் சவுந்தர்ராஜன், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் மகபூப்ஜான், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆர்.பி.ஆதித்தன், ரெட்டியார்பட்டி நாராயணன், பகுதி செயலாளர்கள் வக்கீல் ஜெனி, திருத்து சின்னத்துரை, காந்தி வெங்கடாசலம், மோகன், சக்திகுமார், சிந்து முருகன், சண்முககுமார், ஹயாத், இளைஞர் அணி திருவை சின்னத்துரை, இளைஞர் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் (எ) கணேசன், கவுன்சிலர் சந்திரசேகர், பாளை ஒன்றியச் செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பிரமணியன், அந்தோனி அமல்ராஜ், கேபிகே செல்வராஜ், மாவட்டப் பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், சப்பாணிமுத்து, கேடிசி சின்னப்பாண்டி, வக்கீல் ரமேஷ், செல்லையா, வண்ணை கணேசன், செந்தில்ஆறுமுகம், வெங்கடசுப்பிரமணியன், டவுன் பகுதி ஜெ. பேரவை செயலாளர் சீனிமுகம்மது சேட், வெங்கட சுப்பிரமணியன், அமானுல்லா, ஜெ.,பேரவை தங்க பிச்சையா, அம்ஸ் முருகன், நத்தம் வெள்ளப்பாண்டி, ஆர்எஸ்.மணி, சென்ட்ரல் தியேட்டர் சொரிமுத்து, சொக்கலிங்கம், கந்தன், ஆட்டோ ஷேக், டால் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு வண்ணார்பேட்டை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் நிறுத்தப்படும் நகர பஸ்கள், பாலத்தின் முன்பகுதியில் திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post நெல்லையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Paddy ,District Secretary ,Dachacha Ganesaraja ,Nelli ,Vilappuram ,Gaddy ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும்...