×

கொடைக்கானலில் மகன்களுடன் தாய் மாயம்

கொடைக்கானல், மே 30: கொடைக்கானல் ஆனந்தகிரி 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் பஷீர் அகமது (40). இவரது மனைவி பேகம் சாகிபா (31). இவர்களுக்கு 12, 8 வயதுகளில் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த மே 24ம் தேதி வழக்கம்போல் பஷீர் அகமது வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி, மகன்களை காணவில்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். ஆனால் யாருக்கும் தெரியவில்லை.

மேலும் வெளியூர்களிலுளள் உறவினர்கள் வீடுகள் மற்றும் பல பகுதிகளில் தேடியுள்ளார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் பஷீர் அகமது கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தாய், மகன்களை தேடி வருகின்றனர்.

The post கொடைக்கானலில் மகன்களுடன் தாய் மாயம் appeared first on Dinakaran.

Tags : Mother Mayam ,Kodaikanal ,Basheer Ahmed ,Anandagiri 2nd Street ,Begum ,Mayam ,
× RELATED கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி...