×

திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் நாளை கவுன்சலிங் துவக்கம்

 

திருப்பூர், மே 30: சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் 2023-24ம் கல்வியாண்டு இளநிலை பட்ட படிப்புகளுக்கான கவுன்சலிங் நாளை (31ம் தேதி) துவங்கி ஜூன் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. விண்ணப்பித்த மாணவர்கள், www.cgac.in என்கிற கல்லூரி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலை பார்த்துக்கொள்ளலாம். மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், தேசிய மாணவர்படை ஏ சான்று பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில், நாளை (31ம் தேதி) மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும். முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், அந்தமான் நிகோபார் தீவு தமிழர்கள் சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்துகொள்ள, உரிய ஒரிஜினல் ஆவணங்களுடன் கல்லூரிக்கு வரவேண்டும். ஜூன் 1ம் தேதி காலை, 9.30 மணி முதல் பி.காம். பாடப்பிரிவுக்கு, காலை 11.30 மணி முதல் பி.காம். சிஏ.,வுக்கு மதியம், 2 மணி முதல் பி.காம்.ஐ.பி.,க்கு கவுன்சலிங் நடைபெறும். ஜூன் 2ம் தேதி காலை 9.30 மணிக்கு பி.பி.ஏ., க்கு, மதியம் 11.30 மணக்கு பொருளியல், மதியம் 12.30 மணிக்கு வரலாறு. ஜூன் 3ம் தேதி காலை 9.30 மணிக்கு இயற்பியல், காலை 11.30க்கு வேதியியல், மதியம் 2 மணிக்கு விலங்கியலுக்கு கவுன்சலிங் நடைபெறும்.

The post திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் நாளை கவுன்சலிங் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Chikkanna Government College ,Tirupur ,Chikkanna Government Arts College ,Dinakaran ,
× RELATED கல்வி நிறுவனங்களில் களைகட்டிய பொங்கல் விழா