×

மானிய விலையில் இயற்கை இடுபொருள் வழங்க வேண்டும்: பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, மே 29: இயற்கை இடுபொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவனச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் விவசாயிகள், தமிழக வேளாண்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட்டில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, இயற்கை இடுபொருட்களான பஞ்சகவ்யா, மூலிகை பூச்சிவிரட்டி, ஜீவாமிர்தம், மீன் அமிலம் தசகவ்யம் போன்றவை தயாரிக்க பயிற்சியும் மானியமும் வழங்கியுள்ளது.

இந்த பணியை வேளாண் சுய உதவிக்குழுக்கள் செய்து வருகிறது. இவர்கள் தயாரிக்கும் இடுபொருட்களை இயற்கை விவசாயம் செய்யும் உழவர்களுக்கு மானிய விலையில் வழங்குவதுடன், பயன்படுத்துவதற்கான உரிய வழிமுறைகளையும் செய்து காண்பிக்க வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திலும் இயற்கை வேளாண்மைக்கு ஒரு உதவி வேளாண் உதவி அலுவலரை நியமிக்க வேண்டும். இப்பணியை சிறப்பாக செயல்படுத்த அனுபவமிக்க இயற்கை விவசாயிகள் அடங்கிய குழுவை ஏற்படுத்தி பணியை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். மேலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கால் நடை பண்ணைகளிலும் இயற்கை இடுபொருள் உற்பத்தி மையம் தொடங்க வேண்டும். இயற்கை இடுபொருள் விற்பனை மையம் தொடங்குபவர்களுக்கு மானிய உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post மானிய விலையில் இயற்கை இடுபொருள் வழங்க வேண்டும்: பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thiruthurapoondi ,Thiruvarur ,Dinakaran ,
× RELATED திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம்..!!