×

சமூகவலைதளங்கள் மூலம் மத ரீதியான அவதூறு பரப்புவதை தடுக்க சட்டம்: இலங்கை அமைச்சர் அறிவிப்பு

கொழும்பு: சமூக வலைதளங்களில் மதத்தை அவமதிக்கும் விதமாக கருத்துகளை வெளியிடுவதை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என இலங்கை அமைச்சர் விதுரா விக்ரமநாயக்கா தெரிவித்தார். இலங்கையை சேர்ந்த நகைச்சுவை மேடை பேச்சாளர் நடாஷா எதிரிசூரியா(31)புத்த மதத்தை அவமதிக்கும் வகையில் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இது சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து மன்னிப்பு கேட்டார். அவர் மலேசியா செல்ல முயற்சித்த போது அவரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிறிஸ்தவ போதகர் ஜெரோம் பெர்னாண்டோ புத்தரை குறித்து தெரிவித்த கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் சிங்கப்பூருக்கு தப்பி சென்ற ஜெரோம் பெர்னாண்டோ தன்னை கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்க கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சேபல் அமரசிங்கே என்ற யூடியூபர் கண்டி கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் புத்தரின் பல் குறித்து அவதுாறு கருத்துகளை வெளியிட்டார்.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இலங்கை மத மற்றும் கலாசார துறை அமைச்சர் விதுரா விக்ரமநாயகா நேற்று கூறுகையில்,‘‘ சமூக வலைதளங்களில் மதங்களை அவமதிக்கும் விதத்தில் கருத்துகளை வெளியிடுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும்’’ என்றார்.

The post சமூகவலைதளங்கள் மூலம் மத ரீதியான அவதூறு பரப்புவதை தடுக்க சட்டம்: இலங்கை அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Colombo ,Sri Lanka ,
× RELATED சீன உளவு கப்பல் இலங்கைக்கு வரும்...