×

திப்பு சுல்தானின் துப்பாக்கி ஏற்றுமதிக்கு தடை

லண்டன்: மைசூரை ஆண்ட திப்பு சுல்தானுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 18ம் நூற்றாண்டை சேர்ந்த, ரூ.20.40 கோடி மதிப்பிலான, அரியவகை துப்பாக்கியை இங்கிலாந்தை சேர்ந்த ஏல நிறுவனம் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வாங்குவதற்கு கால அவகாசம் அளிக்கும் வகையில் அதற்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இங்கிலாந்து கலை மற்றும் பாரம்பரிய துறை அமைச்சர் லார்ட் ஸ்டீபன் பார்கின்சன் கூறிய போது, “கலை படைப்புகள் ஏற்றுமதிக்கான குழுவின் ஆலோசனைப்படி, திப்பு சுல்தானின் துப்பாக்கிக்கு ஏற்றுமதி தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது,” எனத் தெரிவித்தார்.

“14 துளைகள் கொண்ட திப்பு சுல்தானின் அரியவகை வேட்டை துப்பாக்கி 1793-1794ம் ஆண்டுகளில் பறவைகளை சுடுவதற்காக வடிவமைக்கப்பட்டது,” என்று அதனை உருவாக்கிய ஆசாத் கான் முகமது அதில் பொறித்துள்ளார். இந்த துப்பாக்கி , 1790-1792களில் திப்பு சுல்தானுடன் போரிட்ட ஜெனரல் ஏர்ல் கார்ன்வாலிஸ்க்கு பரிசளிக்கப்பட்டது.

The post திப்பு சுல்தானின் துப்பாக்கி ஏற்றுமதிக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Tapu ,Sultan ,London ,India ,Mysore ,Tapu Sultan ,Dinakaran ,
× RELATED கேரளாவில் இருந்து கொண்டு வந்த...