×

ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் மாற்ற அடையாள அட்டை தேவையில்லை: டெல்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: வங்கியில் ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள எவ்வித அடையாள அட்டைகளும் கொடுக்க தேவையில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை நேற்று வழங்கியுள்ளது. நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்து வந்த ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறப்போவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 23ம் தேதி விசாரணைக்கு வந்தபோது,\\”மனுதாரர் தரப்பு வாதத்தில்,\\”ரூ.2000 நோட்டுக்களை எந்த அடிப்படை அடையாள அட்டையும் இல்லாமல் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்பதை எதிர்க்கிறோம்.

அதனால் அடையாள அட்டைகளுடன் ரூ.2000 நோட்டுகளை மாற்றும்படி புதிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்தார். இதையடுத்து ரிசர்வ வங்கி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பராக் திரிபாதி,\\” ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவது என்பது சட்டபூர்வமான நடவடிக்கையாகும். இதில் எந்தவித முறைகேடுகளும் நடக்க வாய்ப்பு கிடையாது’’ என தெரிவித்தார்.

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் நேற்று வழங்கிய தீர்ப்பில்,‘‘ ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப்பெறும் விவகாரத்தில் அனைத்து உரிய விதிமுறைகளும் பின்பற்றப்படுவதாகவும், அதேப்போன்று இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு கிடையாது எனவும் ரிசர் வங்கி தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது’’ என தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

The post ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் மாற்ற அடையாள அட்டை தேவையில்லை: டெல்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,New Delhi ,
× RELATED கெஜ்ரிவால் மேல்முறையீடு...