×

5 மாநில சட்ட பேரவை தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய உத்தரவு: தேர்தல் ஆணையம் அதிரடி

புதுடெல்லி: 5 மாநில சட்டபேரவை தேர்தலையொட்டி அந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மபி, சட்டீஸ்கர், தெலங்கானா,ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்ட பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. சட்டீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மபியில் பாஜவும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியும் நடக்கிறது. அந்த மாநிலங்களில் சட்டபேரவை தேர்தல் நடக்க உள்ளதால் ,வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிக்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இது தொடர்பாக 5 மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அதில்,மக்கள் பிரதிநிதித்துவ சட்டடத்தின்படி ஒவ்வொரு சட்ட பேரவை தேர்தலுக்கு முன்னரும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.அதன்படி 2023, அக்டோபர் 1ம் தேதியன்று யாரெல்லாம் 18 வயதை பூர்த்தி அடைகிறார்களோ அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சமீப காலம் வரை ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். தேர்தல் சட்டத்தில் தற்போது கொண்டுவரப்பட்ட மாற்றங்களையடுத்து, ஜன.1.,ஏப்.1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய 4 நாள்கள் தகுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 5 மாநில சட்ட பேரவை தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய உத்தரவு: தேர்தல் ஆணையம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : 5 State Legal Council ,New Delhi ,Election Commission ,Mabi ,Commission ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய...