×

கடல் வழியாக கேபிள்கள் மூலம் இணைய சேவை: மும்பையிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட கப்பல் சென்னை வந்தது

சென்னை: டேட்டா பரிமாற்றத்துக்காக மும்பையிலிருந்து சிங்கப்பூருக்கு கடல் வழியாக கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் கேபிளை இழுத்து வந்த கப்பல் சென்னையை வந்தடைந்தது. என்.டி.டி. நிறுவனம் மும்பையில் இருந்து கடல் வழியாக சிங்கப்பூருக்கு இணைய சேவையை பரிமாறும் பணியை தொடங்கியுள்ளது. இதற்காக மும்பையில் இருந்து கடலில் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த கேபிள் இழுத்து வந்த கப்பல் தற்போது சென்னை சாந்தோம் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்ட கேபிள்களை என்.டி.டி. நிறுவன அலுவலகத்துடன் நிலம் வழியே இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கடல் வழியாக அந்த கேபிள் சுமார் 8,100 கி.மீ தூரத்திற்கு மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் வரை பாதிக்கப்பட உள்ளது. இதனால் அதிவேக இணைய சேவையை பெற முடியும்.

The post கடல் வழியாக கேபிள்கள் மூலம் இணைய சேவை: மும்பையிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட கப்பல் சென்னை வந்தது appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Singapore ,Chennai ,
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...